மாநில அந்தஸ்து பற்றிய கருத்தரங்கம்
- Home
- Details
மாநில அந்தஸ்து பற்றிய கருத்தரங்கம்
23.11.23 அன்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில அந்தஸ்து நிராகரிப்பு அடுத்தது என்ன? எனும் தலைப்பில் விரிவான ஒரு கருத்தரங்கம் புதுச்சேரி தமிழ்சச் சங்கத்தில் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு சேர்மன் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார் வந்திருந்த அனைவரையும் துணைத் தலைவர் ரவி வரவேற்றுப் பேசினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எ.மு ராஜன் நோக்க உரையாற்றினார்.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கழகத் தலைவருமான பேராசிரியர் மு. ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி நித்தியானந்தம் வழக்கறிஞர் கார்த்திகேயன் துபாயில் இருந்து இணைய வழியில் பங்கேற்ற ரகுபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநில அந்தஸ்து பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது பொருளாளர் முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி நன்றி கூறினார்.
கருத்தரங்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.